மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக கடிதங்கள் தேக்கம்

மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக கடிதங்கள் தேக்கம்

மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக கடிதங்கள் தேக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2019 | 2:11 pm

Colombo (News 1st) தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான கடிதங்கள் பதிவுத்தபால் எனவும் அவர் கூறியுள்ளார்.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கும், தபால்துறை அமைச்சருக்கும் இடையில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

நியமனம், பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளை
அடிப்படையாகக் கொண்டு, இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்