போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

by Staff Writer 17-07-2019 | 10:57 AM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 40 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கம்பஹா கடுகஸ்தர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சா கலந்த 1 150 போதைப்பொருள் உருண்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.