தன் காதலர் பற்றி மனம் திறந்த அமலா பால்

தன் காதலர் பற்றி மனம் திறந்த அமலா பால்

தன் காதலர் பற்றி மனம் திறந்த அமலா பால்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Jul, 2019 | 3:17 pm

ரத்னகுமாரின் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படம் அண்மையில் வௌியாகவுள்ள நிலையில், வழங்கிய செவ்வி ஒன்றில் தனது காதலர் பற்றி கருத்து வௌியிட்டுள்ளார்.

தனது ஆடை படம் தொடர்பில் அவரிடம் கூறியபோது, உடல் மற்றும் மனதளவில் முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியதாக, அமலா பால் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வேலை குறித்த தனது பார்வைக்கும் தான் மாறியதற்கும் அவரே காரணம் என கூறிய அமலா பால், ஒரு தாயால் மட்டுமே நிபந்தனையற்ற அன்பை வழங்கமுடியும் என நினைத்திருந்த நிலையில், அவராலும் அதைச் செய்ய முடியும் என நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமா மீது தனக்குள்ள ஆர்வத்தை அறிந்த அவர், எப்பொழுதும் தன்னைப் பாராட்டிக் கொண்டு இராது, தன்னை மோசமான நடிகை எனக் கூறி தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததும் அவர் தான் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு, தன் வாழ்விலுள்ள குறைகளை அகற்றிய அவர், தன் வாழ்வின் உண்மை எனக் குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால் மற்றும் இயக்குநர் விஜய் ஆகிய இருவரும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

இதேவேளை, இயக்குநர் விஜயம் அண்மையில் இரண்டாவதாக வைத்தியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்