ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் தபால் பரிமாற்றல் நடவடிக்கை பாதிப்பு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் தபால் பரிமாற்றல் நடவடிக்கை பாதிப்பு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் தபால் பரிமாற்றல் நடவடிக்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2019 | 7:24 am

Colombo (News 1st) ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நேற்று (17) மாலை 4 மணிமுதல் நாளை (18) மாலை 4 மணிவரை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவிடம் வினவியபோது, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அமைச்சரவையில சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த விடயம் தொடர்பில் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்