by Chandrasekaram Chandravadani 17-07-2019 | 8:02 AM
Colombo (News 1st) ஜேர்மனியின் உர்சுலா வொன்டர் லியென் (Ursula Vonder Leyen) ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வரலாற்றில் முதற்தடவையாக பெண்ணொருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் உர்சுலா வொன்டர் லியென் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் க்ளோவ்ட்டின் (Jean Claude Juncker) பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியுடன் நிறைவடைகின்றது.
ஐக்கியம் மற்றும் சக்தி மிக்க ஐரோப்பாவை உருவாக்கும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்கெடுப்பின் போது உர்சுலா வொன்டர் லியென் குறிப்பிட்டிருந்தார்.
பிரஸல்ஸில் பிறந்த இவர், 7 பிள்ளைகளின் தாயென்பதுடன், பிரபல வைத்திய நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக கிறஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பதவிக்கு அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.