உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம்: பிஜியுடனான போட்டியில் இலங்கை தோல்வி

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம்: பிஜியுடனான போட்டியில் இலங்கை தோல்வி

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம்: பிஜியுடனான போட்டியில் இலங்கை தோல்வி

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2019 | 9:16 pm

Colombo (News 1st) உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் தரவரிசைக்காக பிஜியுடன் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் 13 முதல் 16 ஆம் நிலைக்கான அணிகளை தெரிவு செய்யும் E குழுவில் இலங்கை, சமோவா, பிஜி, சிங்கப்பூர் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

பிஜி அணிக்கு எதிரான போட்டியில் முதல் கால் மணியை 11-10 எனும் கோல் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

எனினும், இரண்டாம் கால் மணியை 17- 9 எனும் கோல் கணக்கிலும் மூன்றாம் கால் மணியை 20-8 எனும் கோல் கணக்கிலும் பிஜி அணி தன்வசப்படுத்தியது.

நான்காம் கால் மணியில் 16-12 எனும் கோல் கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றது.

என்றாலும், நான்கு கால் மணிகளின் முடிவில் 59-44 எனும் கோல் வித்தியாசத்தில் பிஜி அணி வெற்றிவாகை சூடியது.

E குழுவில் தாம் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்ற பிஜி அணி, அந்தக் குழுவில் முதலிடம் வகிப்பதுடன் 3 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்ற இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்