வலைப்பந்தாட்டம்: இலங்கையை வீழ்த்தியது சமோவா

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம்: இலங்கையை வீழ்த்தியது சமோவா

by Staff Writer 16-07-2019 | 7:21 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 65 - 55 எனும் கோல் கணக்கில் சமோவா வென்றது. போட்டியில் முதல் கால் மணியை 17 - 13 எனும் கோல் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. எனினும், அடுத்த மூன்று கால் மணிகளிலும் ஆதிக்கம் செலுத்திய சமோவா அணி 65 - 55 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் இலங்கை சார்பாக நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் 58 வாய்ப்புகளில் 52 கோல்களைப் போட்டார்.