வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2019 | 10:01 am

Colombo (News 1st) நேபாளம் மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் அஸாம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

வௌ்ளத்தினால் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பீஹார் மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வௌ்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதுடன் மின்னல் தாக்கத்தினால் மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்