மும்பையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

16 Jul, 2019 | 8:49 pm

மும்பை – டோங்கிரி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் The Indian Express செய்தி வௌியிட்டுள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் 12-இற்கும் மேற்பட்டோர் சிக்குண்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டோங்கிரி டாண்டல் தெருவில் உள்ள கேசர்பார் கட்டடம் இன்று காலை 11.40 மணியளவில் இடிந்துள்ளது.

தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை தீயணைப்புப் படையினர் நாடியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்