முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வாக்குமூலம்

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2019 | 11:42 am

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (15) முற்பகல் 10 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இரவு 7 மணி வரை வாக்குமூலம் வழங்கியதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்