பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா

எழுத்தாளர் Bella Dalima

16 Jul, 2019 | 4:57 pm

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். முன்னதாக அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போதும் ரஹ்மான் இசையில் விஜய் பாடியதில்லை.

பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாராவிற்கு என்ன வேடம் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்த நிலையில், அவர் மருத்துவ மாணவியாக நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்