செல்ஃபி எடுக்க முற்பட்ட போது கடலில் வீழ்ந்த இளைஞர்கள்: இருவரைக் காணவில்லை

செல்ஃபி எடுக்க முற்பட்ட போது கடலில் வீழ்ந்த இளைஞர்கள்: இருவரைக் காணவில்லை

செல்ஃபி எடுக்க முற்பட்ட போது கடலில் வீழ்ந்த இளைஞர்கள்: இருவரைக் காணவில்லை

எழுத்தாளர் Bella Dalima

16 Jul, 2019 | 7:35 pm

Colombo (News 1st) உனவட்டுன, ரூமஸ்ஸல பகுதியில் கற்பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது இளைஞர்கள் நால்வர் கடலில் வீழ்ந்துள்ளனர்.

இவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

காலி – தெலிக்கட பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இருவரே காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போனோரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்