இலங்கை சாரணர்கள் குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக தேசியக்கொடி கையளிப்பு

இலங்கை சாரணர்கள் குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக தேசியக்கொடி கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2019 | 7:51 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கையின் சாரணர்கள் குழுவிற்கு தேசியக்கொடி உத்தியோகப்பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

24 ஆவது தடவையாக இம்முறை நடைபெறும் சர்வதேச சாரணர் ஜம்போரி, அமெரிக்காவின் வெர்ஜினியா பிராந்தியத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள சாரணர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் அடையாளத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் எனவும் கூறியுள்ளார்.

ஜம்போரியில் பங்கேற்க விசா கிடைக்காத சாரணர்களுக்கு விசா வழங்குமாறு
தூதுவருக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்