அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2019 | 9:03 pm

Colombo (News 1st) அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்னர்.

இதற்கமைய, எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்துடன் இடைநிறுத்தப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு அழுத்தம் கொடுப்பது இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்