NTJ அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு பிணை

NTJ அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு பிணை

by Staff Writer 15-07-2019 | 9:19 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை கவனத்தில் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று (15) பிறப்பித்துள்ளார். இதற்கமைவாக, தலா 5 இலட்சம் ரூபா பொறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிப்பதற்கும் சந்தேகநபரின் கடவுச்சீட்டை இடைநிறுத்துவதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை, இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் செயற்பட்டு இந்த அமைப்புடன் தொடர்புடைய காணொளி மற்றும் இறுவட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.