ஊழல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் ஜேக்கப் ஸுமா

குற்றச்சாட்டானது அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கான சதி - தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

by Staff Writer 15-07-2019 | 7:21 PM
Colombo (News 1st) தமக்கெதிராகச் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தம்மை அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டுவதை இலக்காகக் கொண்ட சதி என, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா (Jacob Zuma) தெரிவித்துள்ளார். நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணையின்போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதவிக்காலத்தின்போது, ஊழல் வலையமைப்புக்களை மேற்பார்வை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் இந்தக் குழுவின் முன்னால் அவர் முதல்தடவையாக ஆஜராகியிருந்தார். சர்ச்சைக்குரிய குப்தா குடும்பத்துடன் அவர் பேணி வந்த நட்புறவை முன்னிறுத்தியே, ஜேக்கப் ஸுமா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த குடும்பத்தினர் அமைச்சரவை நியமனத்திலும் தேர்தல் வெற்றிகளிலும் ஊழல் மூலம் ஆதிக்கம் செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைவரையும் அவர்கள் நிராகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.