by Staff Writer 15-07-2019 | 3:40 PM
Colombo (News 1st) நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டுவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 22 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஈரானிய பிரஜைகள் 9 பேரும் உள்ளடங்குகின்றனர்.
107 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஈரானைச் சேர்ந்த 9 சந்தேகநபர்கள் அண்மையில் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத்தவிர, பேருவளை பகுதியில் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் கைதான 8 சந்தேகநபர்களும் கிழக்கு கடற்பிராந்தியத்தில் 273 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.