கடுவளை - கொள்ளுப்பிட்டி போக்குவரத்தில் மாற்றம்

177 பஸ் மார்க்கத்தில் போக்குவரத்து நாளை மட்டுப்படுத்தப்படும்

by Fazlullah Mubarak 14-07-2019 | 8:20 PM

கடுவளை - கொள்ளுப்பிட்டிக்கு இடையிலான 177 பஸ் மார்க்கத்தில் நாளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகமுவ, கடுவளை, கொத்தலாவலையில் உள்ள சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்