குருந்துவத்தை வாகனப் போக்குவரத்தில் இடையூறு

குருந்துவத்தை வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

by Staff Writer 13-07-2019 | 6:48 PM
Colombo (News 1st)  கொழும்பு - குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளில் நாளை (14) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்து தூதுவராலயம் மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள “CAR FREE ZONE” காரற்ற பகுதி திட்டத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கிரீன்பாத், கன்னங்கர மாவத்தை, நிதஹஸ் மாவத்தை, மேட்லன்ட் பிளேஸ், இலங்கை மன்றக்கல்லூரி, மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை உள்ளிட்ட வீதிகளில் நாளை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. வீதி மூடப்படும் காலப்பகுதியில் இயன்றளவு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, களனிவௌி ரயில் மார்க்கத்தில் நாரஹென்பிட்டி மற்றும் நுகேகொடைக்கு இடையிலான குறுக்கு வீதி திருத்த பணிகளுக்காக இன்றிரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருத்தப்பணிகள் காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தில் ரயில்வே அவன்யூ குறுக்கு வீதி நாளை காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 வரை மூடப்படவுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளர்.