வெடிகுண்டு சந்தேகத்தைக் கிளப்பிய பொதியில் 1 கிலோ தங்கக்கட்டி

வெடிகுண்டு சந்தேகத்தைக் கிளப்பிய பொதியில் 1 கிலோ தங்கக்கட்டி

வெடிகுண்டு சந்தேகத்தைக் கிளப்பிய பொதியில் 1 கிலோ தங்கக்கட்டி

எழுத்தாளர் Bella Dalima

13 Jul, 2019 | 5:42 pm

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு சந்தேகத்தைக் கிளப்பிய பொதி ஒன்றிலிருந்து 1 கிலோ தங்கக்கட்டி கைப்பற்றப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியின் மூன்றாம் எண் நுழைவு வாயில் அருகே கறுப்பு நிற டேப்பால் சுற்றப்பட்டு ஒரு மர்மப் பொதி கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்றனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பொதியைப் பிரித்துப் பார்த்துள்ளனர்.

அதற்குள் ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி இருந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து அதை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்