சஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் இளைஞரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை

சஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் இளைஞரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை

சஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் இளைஞரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2019 | 4:14 pm

Colombo (News 1st) தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரானுடன் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் ஆயுதப்பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் இளைஞர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இணைந்து மஹரகம பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, நேற்று (12) முற்பகல் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

அரநாயக்க பகுதியை சேர்ந்த மொஹமட் தஜுடீன் என்ற 20 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இந்த இளைஞர் மஹரகம பகுதிக்கு தொழிலுக்காக வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்