எதிர்வரும் 16 ஆம் திகதி சந்திரகிரகணம்: பகுதியளவில் தென்படும்

எதிர்வரும் 16 ஆம் திகதி சந்திரகிரகணம்: பகுதியளவில் தென்படும்

எதிர்வரும் 16 ஆம் திகதி சந்திரகிரகணம்: பகுதியளவில் தென்படும்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2019 | 4:02 pm

Colombo (News 1st) எதிர்வரும் 16 ஆம் திகதி சந்திரகிரகணம் பகுதியளவில் தென்படவுள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளிலும் சந்திர கிரகணம் தென்படவுள்ளது.

இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது.

17 ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]irst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்