தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இரத்து

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இடம்பெறவிருந்த சாட்சி விசாரணை இரத்து

by Staff Writer 12-07-2019 | 3:45 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று (12) இடம்பெறவிருந்த சாட்சி விசாரணை இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் வௌிநாடு சென்றுள்ளதால், சாட்சி விசாரணை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். இதற்கிணங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி அவர்களை சாட்சி விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அந்த பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டரான தரங்க பத்திரன உள்ளிட்டோர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.