வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 12-07-2019 | 4:02 PM
Colombo (News 1st)  நாட்டில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. வாய் புற்றுநோய் தொடர்பில் நாளாந்தம் நால்வர் உயிரிழப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் வாய்வழி நோய்கள் தொடர்பிலான சிரேஷ்ட பேராசிரியர் W.M. திலகரட்ண தெரிவித்தார். நாட்டில் ஆண்களே வாய் புற்றுநோயினால் அதிகம் பீடிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். பாக்கு மற்றும் புகையிலை பாவனை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக சந்தர்ப்பங்களை உருவாக்குவதாகவும் விசேடமாக இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் வௌிநாட்டு உற்பத்திகளுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், வாய் புற்றுநோயை இலகுவில் அடையாளம் காண முடியும் என்பதால் துரிதமாக குணப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் வாய்வழி நோய்கள் தொடர்பிலான சிரேஷ்ட பேராசிரியர் W.M. திலகரட்ண குறிப்பிட்டார். இதேவேளை, வாய் புற்றுநோய் தொடர்பிலான ஆராய்ச்சி கலந்துரையாடல் சர்வதேச மாநாடு இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.