வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 26.4 ஏக்கர் காணி விடுவிப்பு

by Staff Writer 12-07-2019 | 4:20 PM
Colombo (News 1st) யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 26.4 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதனிடையே, பாதுகாப்பு படையினரின் வசமுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.