நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: மது போதையில் வாகனம் செலுத்திய 243 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: மது போதையில் வாகனம் செலுத்திய 243 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: மது போதையில் வாகனம் செலுத்திய 243 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2019 | 3:36 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 243 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (11) காலை முதல் இன்று காலை 6 மணி வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த 5 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

அன்று முதல் இன்று காலை 6 மணி வரை மது போதையில் வாகனம் செலுத்திய 2280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இந்த மாதம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்