இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உதயம்

by Staff Writer 11-07-2019 | 8:31 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி இன்று உதயமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.