வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்ற 858 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்ற 858 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்ற 858 பேர் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2019 | 4:59 pm

Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்று பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 858 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் 588 பேர் குவைத்திலிருந்து வருகை தந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிலுக்காக சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய மேலும் 146 பேர் குவைத் தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரியாத்திலிருந்து 18 பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளதுடன், மேலும் 33 பேர் அங்கு தங்கியுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, டோஹாவில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 12 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதனிடைய கடந்த 6 மாதங்களில் 95,908 பேர் வௌிநாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளனர்.

அவர்களில் 56,526 பேர் ஆண்கள் எனவும் 39,382 பேர் பெண்கள் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்