மன்னார், பலாங்கொடையில் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம்

மன்னார், பலாங்கொடையில் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம்

மன்னார், பலாங்கொடையில் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2019 | 8:44 pm

Colombo (News 1st) ஆற்றல் மிகு மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கான இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம் இன்று மன்னார் மற்றும் பலாங்கொடை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

Anchor மற்றும் Champions Network ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

மன்னார் மாவட்டத்திற்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரிக்கு சென்றனர். அங்கு மாணவர்களுக்கு இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், விண்ணப்பங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திற்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் மாணவர்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பின்னர் மன்னார் நகரிலும் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம் தொடர்பிலான தெளிவுபடுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பலாங்கொடைக்கு சென்ற மற்றுமொரு குழுவினர் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

12 -18 வயதிற்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களும் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு 0777-600 040 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்