டொனால்ட் ட்ரம்ப் – இம்ரான் கான் விரைவில் சந்திப்பு

டொனால்ட் ட்ரம்ப் – இம்ரான் கான் விரைவில் சந்திப்பு

டொனால்ட் ட்ரம்ப் – இம்ரான் கான் விரைவில் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2019 | 3:44 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரும் எதிர்வரும் 22 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதனை வௌ்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வௌ்ளை மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

ஆசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக அமெரிக்கா – பாகிஸ்தான் உறவு சிறப்பாக இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து செயற்படுவதால், அந்நாட்டிற்கான சில நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தியது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ட்ரம்பிடம் இம்ரான் கான் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான் கானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்ளிட்ட பலரும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்