ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட அமைச்சர்களை வௌிக்கொணரும் நடவடிக்கை இன்றிலிருந்து ஆரம்பம்: எதிர்க்கட்சியினர் தெரிவிப்பு

ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட அமைச்சர்களை வௌிக்கொணரும் நடவடிக்கை இன்றிலிருந்து ஆரம்பம்: எதிர்க்கட்சியினர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2019 | 8:13 pm

Colombo (News 1st) ஊழல் மோசடியுடன் தொடர்புபட்ட அமைச்சர்களை வௌிக்கொணரும் புதிய நடவடிக்கையொன்றை இன்றிலிருந்து ஆரம்பிப்பதாக எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நாம் ஆரம்பத்தில் TOP 10 என்று ஆரம்பித்தோம். தற்பொழுது TOP 20 ஆகியுள்ளது. 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னர் முறைப்பாடுகளை முன்வைப்பது பிற்போடப்பட்டது. இன்றிலிருந்து மீண்டும் நல்லாட்சியில் TOP 20 தொடர்பில் முறைப்பாடு செய்ய எதிர்பார்க்கின்றோம்

என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்று ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்