2019ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

2019ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

2019ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2019 | 11:22 am

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பரீட்சைகளை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சையில் இந்தத் தடவை 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களில், 1 39 475 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய விண்ணப்பித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1 98 229 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்