மசாஜ் உபகரணத்தில் போதை வில்லைகள்: இளைஞர் கைது

மசாஜ் செய்யும் உபகரணத்தில் 14 கோடி ரூபா பெறுமதியான போதை வில்லைகள்: இளைஞர் கைது

by Staff Writer 10-07-2019 | 5:43 PM
Colombo (News 1st) 14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதை வில்லைகளுடன் மத்திய தபால் பரிமாற்றகத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதங்களை மசாஜ் செய்யும் உபகரணமொன்றில் மறைத்து வைக்கப்பட்டு, பெல்ஜியத்தில் இருந்து இந்த போதை வில்லைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் தெரிவித்தார். தபால் ஊடாக கிடைத்த குறித்த பொதியை பொறுப்பேற்பதற்கு கல்கிசை பகுதியில் இருந்து வருகை தந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மத்திய தபால் பரிமாற்றகத்தில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார். பொதியில் இருந்து 2952 போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்னரும் பெல்ஜியத்தில் இருந்து 5000 போதை வில்லைகள் அடங்கிய பொதியொன்று மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு கிடைத்திருந்ததுடன், அதன் பெறுமதி 27 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்