சந்தேகநபர்களின் கணக்கு தகவல்களை வழங்குமாறு உத்தரவு

ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களின் கணக்கு விபரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 10-07-2019 | 6:42 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரின் வங்கிக்கணக்குகள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்குமாறு தனியார் மற்றும் அரச வங்கிகள் சிலவற்றுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இம்ரான், அவருடைய மனைவி மற்றும் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலரின் வங்கிக் கணக்கு விபரங்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்காக முறைப்பாட்டின் சாட்சியாளர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.