நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் இன்றும்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் இன்றும் நாளையும்

by Staff Writer 10-07-2019 | 7:36 AM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றும் நாளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை (11ஆம் திகதி) மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது குறித்து எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்த போதிலும், இது குறித்து இறுதி நிலைப்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் நாளை காலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு மீண்டும் கூடி, இறுதி முடிவினை எடுக்கவுள்ளது. எவ்வாறாயினும், இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதாக சபைமுதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.