பிரித்தானிய பிரதமரை ட்ரம்ப் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு

பிரித்தானிய பிரதமரை ட்ரம்ப் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு

பிரித்தானிய பிரதமரை ட்ரம்ப் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2019 | 9:45 am

Colombo (News 1st) பிரித்தானிய பிரதமரையும் பிரித்தானியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவமதித்துள்ளதாக, பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt) குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை என, டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அத்துடன், பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் கிடைக்கவுள்ளமை பிரித்தானியாவுக்கு ஒரு நல்ல செய்தி எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் கிம் டரச் ட்ரம்பின் நிர்வாகம் “திறமையற்ற ஒன்று” என விமர்சனம் செய்ததை அடுத்து அவர் குறித்தும் பிரித்தானிய பிரதமர் குறித்தும் ட்ரம்ப் இவ்வாறான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்