by Staff Writer 10-07-2019 | 9:31 AM
Colombo (News 1st) தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரைத் திறப்பதற்கு, கர்நாடக முதல்வர் குமாரசாமி அனுமதி வழங்கியுள்ளார்.
மாண்டியாவிலுள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என, கர்நாடக முதல்வர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறக்கவேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்குமாறு கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி தற்போது தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதால் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையே, காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீரை திறந்துவிட்டால் பற்றாக்குறை பிரச்சினையை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.