எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருட்களின் விலை குறைப்பு

by Staff Writer 10-07-2019 | 8:31 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 136 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 159 ரூபா என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுப்பர் டீசல் ஒரு லிட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 131 ரூபா என நிதி அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும், ஒட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை தொடர்ந்தும் 104 ரூபாவாகக் காணப்படும் என நிதி அமைச்சு கூறியுள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 65 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளமையால், அதன் பலனை நாட்டு மக்கள் அனுபவிக்கும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.