மக்கள் சக்தி: கந்தப்பளை எஸ்கடெல் தமிழ் வித்தியாலயத்திற்கு சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன

by Staff Writer 09-07-2019 | 7:35 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் மூலம் நுவரெலியா - கந்தப்பளை எஸ்கடெல் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டன. பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் எஸ்கடெல் தமிழ் வித்தியாலயம் குறைந்த வசதிகளுடன் கூடியதொரு பாடசாலையாகும். தரம் ஒன்று தொடக்கம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட இந்த பாடசாலையில் சுமார் 80 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பாடசாலையில் முறையான சுகாதார வசதிகள் இல்லாமை, இந்த மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். கண்டியைச் சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ரியாஸியின் ஒத்துழைப்புடன், இந்த பாடசாலை மாணவர்களுக்கான நீர் மற்றும் சுகாதார வசதி கட்டமைப்பை வழங்குவதற்கான இயலுமை மக்கள் சக்தி திட்டத்திற்கு இன்று கிட்டியது. இந்த சந்தர்ப்பத்தில் எஸ்கடெல் தோட்டத்தின் உதவி தோட்ட அத்தியட்சகர் அனுப குணசேகர, நியூஸ்ஃபெஸ்ட் நிர்வாக பணிப்பாளர், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி தயானந்த உள்ளிட்டோரும் மக்கள் சக்தி குழுவினரும் பிரசன்னமாகியிருந்தனர்.