by Staff Writer 09-07-2019 | 2:04 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று (9ஆம் திகதி) அதிகாலை 6 மணி வரையான காலப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.