பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 6:00 pm

Colombo (News 1st) Batticaloa Campus-இற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – கொள்ளுப்பிட்டி சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே மாணவர்கள் மீது இன்று மாலை பொலிஸாரால் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி, நுகேகொட, கிருலப்பனை, தும்முல்ல சந்தி ஊடாக காலிவீதிக்கு சென்று, அங்கிருந்து கொள்ளுப்பிட்டி சந்தியை சென்றடைந்தது.

இதன்போது, மாணவர்களைக் கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்