தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசகர் குழுவை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசகர் குழுவை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசகர் குழுவை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 3:19 pm

Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசகர் குழுவை ஸ்தாபிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜெல் ஹெவ், சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசகர் குழு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் முதற்தடவையாகக் கூடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தங்களின் கருத்துக்களை வௌிப்படையாக முன்வைப்பதனூடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த குழு முழுமையான ஆதரவை வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்