கொழும்பின் சில பகுதிகளில் நாளை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 6:09 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (10) காலை 9 மணி முதல் 24 மணித்தியாலத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, நாளை மறுதினம் காலை 9 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்ததுடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவள மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஹோக்கந்தர பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்