கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 8:14 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் சிலவற்றின் மீது இனந்தெரியாத சிலர் நேற்று (08) தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கொக்குவில் – பிடாரி அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள மூன்று வீடுகளுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது வீடுகளின் கதவுகள், ஜன்னல் மற்றும் தளபாடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்