கேகாலை, முல்லைத்தீவில் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம்

கேகாலை, முல்லைத்தீவில் இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 9:07 pm

Colombo (News 1st) ஆற்றல்மிகு மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கான இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

Anchor மற்றும் Champions Network ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இலட்சிய வரம் – 2019 செயற்றிட்டம் கேகாலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கேகாலை – பமுனுகம, மலியதேவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இன்று முற்பகல் சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

ரங்வல – மஹனாக மகா வித்தியாலயம், கலிகமுவ மத்திய வித்தியாலயம், தோலங்கமுவ தேசிய பாடசாலை உள்ளிட்ட சில பாடசாலைகளில் இலட்சிய வரம் – 2019 செயற்றிட்டத்தின் ஊடாக மாணவர்கள் தௌிவூட்டப்பட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரிக்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இலட்சிய வரம் திட்டம் தொடர்பில் தௌிவூட்டியதுடன், மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவங்களையும் பகிர்ந்தளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு – செம்மலை மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு
சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் மாணவர்களுக்கு இலட்சிய வரம் தொடர்பில் தௌிவூட்டினர்.

12 -18 வயதிற்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களும் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு 0777-600 040 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்