கறுவாப் பயிற்சி கற்கைநெறி அறிமுகம்

கறுவாப் பயிற்சி கற்கைநெறி அறிமுகம்

கறுவாப் பயிற்சி கற்கைநெறி அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 8:14 am

Colombo (News 1st) கறுவா தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கறுவாப் பயிற்சி கற்கை நெறியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொஸ்கொடவில் உள்ள கறுவாப் பயிற்சி வித்தியாலயத்தின் மூலம் இந்தக் கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

10 நாட்களைக் கொண்ட கற்கை நெறியாக இது அமைந்துள்ளது.

ஐரோப்பிய பங்களிப்பு மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் துறை அபிவிருத்தி நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்