கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்ட கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள்

கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்ட கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 8:07 pm

Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் கறுப்பு பட்டி அணிந்து தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமைக்கு தமது எதிர்ப்பினை வௌியிட்டனர்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கருத்து தெரிவிக்க முற்பட்ட போது சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்