கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்குத் தாக்கல்

கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்குத் தாக்கல்

கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 2:17 pm

Colombo (News 1st) தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசையை விட 3,47 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும் வேட்புமனு பரிசீலனையின்போது எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அதைத் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக குறித்த மனுவில் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரஜைகளான அவரது கணவர் மற்றும் மகனின் வருமான விபரங்களைத் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த நிலையில், சிங்கப்பூர் அரசு வழங்கியிருந்த சான்றிதழை இணைக்கவில்லை எனவும் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2,000 ரூபா இலஞ்சம் வழங்கியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்