ஏறாவூரில் கைக்குண்டுகளும் தோட்டாக்களும் மீட்பு

ஏறாவூரில் கைக்குண்டுகளும் தோட்டாக்களும் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 2:10 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – ஏறாவூரில் கைக்குண்டுகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் – முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் மேல் வைக்கப்பட்டிருந்த நீர்தாங்கியிலிருந்து இவை மீட்கப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு பிரிவிற்கு நேற்று (08) கிடைத்த தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்று முற்பகல் குறித்த நீர்த்தாங்கி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, நீர்த்தாங்கியில் இருந்து இரண்டு கைக்குண்டுகளும், T 56 ரக துப்பாக்கிக்கான 63 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சேதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டுகள் ஏறாவூர் – புன்னக்குடா பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்