இந்தியா – நியூஸிலாந்து மோதும் முதல் அரையிறுதிப் போட்டி மழையால் தடைப்பட்டது

இந்தியா – நியூஸிலாந்து மோதும் முதல் அரையிறுதிப் போட்டி மழையால் தடைப்பட்டது

இந்தியா – நியூஸிலாந்து மோதும் முதல் அரையிறுதிப் போட்டி மழையால் தடைப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2019 | 10:34 pm

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

நியூஸிலாந்து அணியால் மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே முதல் ஓட்டத்தைப் பெற முடிந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மார்ட்டின் கப்தில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

முதல் 10 ஓவர்களான பவர் பிளேயில் நியூஸிலாந்து அணியால் ஒரு விக்கெட்டை இழந்து 27 ஓட்டங்களையே பெற முடிந்தது.

எனினும், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், ரொஸ் டெய்லர் ஆகியோர் அரைச்சதமடித்து நியூஸிலாந்து அணி 200 ஓட்டங்களைக் கடக்க வழிவகுத்தனர்.

நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்